என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பாதுகாப்பு செலவினங்கள்
நீங்கள் தேடியது "பாதுகாப்பு செலவினங்கள்"
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் பாதுகாப்பு தொடர்பான செலவுகளை தெரிவிக்க முடியாது என மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. #AmitShah #CIC
புதுடெல்லி:
பாஜக தேசிய தலைவராக அமித் ஷா பதவி வகித்து வருகிறார். இவருக்கு விஐபிக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தீபக் ஜுனேஜா என்பவர் பாஜக தலைவர் அமித் ஷாவின் பாதுகாப்புக்காக மத்திய அரசு செலவழித்து வரும் தகவல்கள் கேட்டு மத்திய தகவல் ஆணையத்திடம் விண்ணப்பித்தார்.
அதில், ராஜ்ய சபாவில் உறுப்பினராக இல்லாத ஒருவருக்கு மத்திய அரசின் செலவில் பாதுகாப்பு அளிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், யார் யாருக்கெல்லாம் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்ற பட்டியலையும் கோரியிருந்தார்.
இந்த விண்ணப்பம் தொடர்பாக பதிலளித்த மத்திய தகவல் ஆணையம், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் பாதுகாப்பு செலவினங்கள் குறித்த தகவலை பாதுகாப்பு கருதி தெரிவிக்க முடியாது என தெரிவித்துள்ளது. #AmitShah #CIC
×

X